என் காவல்காரன்
என் காவல்காரன்
என் நாட்களை நிம்மதியாகக்
கடந்து செல்வதற்கு
இப்பொழுதெல்லாம் அந்த பார்வைகள் மட்டுமே போதுமாய் உள்ளது...😍
வாழ்வில் வரும் அத்தனை சோதனைகளின் போதும் பக்கம் நிற்கும் உறவாய் நீ கிடைத்ததெல்லாம் எனக்கான வரம்❤
சேர்ந்து சிரித்து மகிழ்வதற்கு மட்டும் என்றில்லாமல், ஏதேனும் துயரம் வந்தால்,
துவண்டு விடமுன் தாங்கிப்பிடித்துத்
தோளில் சாய்த்துக் கொள்கிறாய்...❤
பயத்தினால் புலம்புகிறேன் மணிக்கணக்கில்....
சகித்துக் கொள்வதே பெரும்பாடாய் இருக்கையில், மார்போடு சாய்த்துக் கொண்டு எனக்காக மன்றாடுவதெல்லாம் எக்கணக்கில் சேர்ப்பேன்...??❤
வழிந்தோடும் கண்ணீர் துளிகளை நிறுத்தச் சொல்லிக் கேட்டுக்கொண்டதேயில்லை நீ..
மாறாக அழுது தீர்த்துவிடு என்று அணைப்பை விடுவிக்காமலே இருக்கின்றாய்...😘
இரட்சிக்க நீ இருக்கையில் கலங்குவதற்கு என்னிடத்தில் தேவையேதும் இப்போது இல்லை...
தன்னவள் தவிக்கும் போது,
தன் வேலை பெரிதெனக் கொள்ளாது தரிசனம் தருகின்றாய் முப்பொழுதுகளிலும்😍
அந்த மார்பில் முகம் புதைத்து கவலை மறந்து தூங்கிப் போனது கூடத் தெரியவில்லை...
கண்விழிக்கும் வேளையில் சலிப்புத்தட்டாமல் விழியில் காதல் சொட்டுகின்றாய்...😍
எல்லாத் தருணங்களிலும்
எனக்காக எஞ்சியிருப்பதெல்லாம்
எல்லையற்ற எனக்கான உன் காதல் மட்டும் தான்...❤
மீண்டும் மீண்டும் காதல் செய்யத் தூண்டுகிறாய்..
இனி அந்தக் காதலிலிருந்து என்னால்
மீண்டு விட முடியாது ❤
#மீண்டுவரத்_தேவையுமில்லை❤
#teddy