இதுவெல்லாம் கடந்து போகும்
இதுவெல்லாம் கடந்து போகும்
நீ அருகில் இல்லையென்பதே
மனதை என்னமோ செய்துவிடுகின்றது...
இத்தனைக்கும் காதலை அள்ளிக் கையில் நிறைய தந்துவிட்டுத்தானே சென்றாய்...❤
நீயில்லா நாட்பொழுதுகளில் அணைத்துத் தூங்கவென ஆசையாக நீ வாங்கித் தந்த பொம்மைக்குட்டியும் ,
பார்க்கும் நொடிகளிலெல்லாம் உன்னைப்
பைத்தியக்காரத்தனமாய் நினைக்கச் செய்துவிடுகின்றது...❤
வரும் நாள் தெரிந்திருந்தும், நீ இப்பொழுது வருவாய் என்று எதிர்பார்ப்பதெல்லாம் என்னவொரு முட்டாள்தனமோ....
உன் பெயரை வேறு யாரும் உச்சரிக்கும் பொழுதுகளிலெல்லாம் உற்சாகம் கொள்ளும் நான், இன்று என்னமோ உடைந்து போகின்றேன்...😔
நான் உன்னுடன் சந்திக்கும் முதற்பிரிவு இதுவல்ல...
முதற்பிரிவில் கூட இப்படிக் கலங்கவில்லை..
நடுக்காட்டில் கைவிடப்பட்ட குட்டிக் குழந்தையைப் போல் உணர்கின்றேன்..
அந்த நெஞ்சாம்கூட்டில் முகம் புதைத்துச் சரணடைந்தால் தான் அத்தனை ஏக்கமும் தீரும் எனக்கு...😔
நீ போகும் நேரத்தில் கண்ணீர் சிந்தக்கூடாதென்று கட்டுக்குள் இருந்த என்னை...
அளவுகடந்த உன் காதலால் கதறியழவும் செய்துவிட்டாய்...😢
கைகள் பொத்தி விரல்கள் நீட்டி நாட்களை எண்ணத் தொடங்கிவிட்டேன்..
நீ என் கண்முன் வந்து நிற்கும் அந்த நாளை எதிர்பார்த்து...
ஒற்றைக் கையால் தோள் பற்றி அருகில் அணைத்து நீ தரும் ஒற்றை நெற்றி முத்தத்தில்,
இதுவெல்லாம் கடந்து போகும் என்ற நம்பிக்கையில்❤❤