அவன்
அவன்
நேரம் இல்லா அவனின் நேரங்களைக் கொள்ளைக் கொள்வதில்
வென்றுவிடுகிறது என் காதல் அவனிடம்....
பார்வையின் சந்திப்பின் போதிலெல்லாம் அந்த உதட்டில் உதிரும் புன்னகை சொல்லிவிடத் தவறுவதில்லை
"எனக்கான அவனின் காதலை"
கவிதை எழுதி தீர்க்கும் அளவிற்கு
அப்படியென்ன காதல் என்று என்னிடம் கேட்டால்..
கவிதைகளால் கூட சொல்லித்தீர்க்க முடியாத அளவு அவன் செய்யும் காதலை எங்ஙனம் சொல்லித் தீர்ப்பேன்❤❤
பெண்மையின் குணங்கள் மறைத்து
திமிரெனும் முகமூடி அணியும் என்னை
வெட்கித்துப் போகச் செய்யும் வேளைகளில்
தோற்றுப் போய்விடுகின்றேன்...
அவனிடமல்ல.... அவனுக்குள்😍
தோழனாய் தகப்பனாய் தலைவனாய் காதலனாய் கவிஞனாய் என்னவனாய்
சில சமயங்களில் என் மடி தேடும் குழந்தையாய் என
அத்தனை வேடம் தரிக்கிறான் அந்த ஒற்றைக் காதலுக்குள்😘
கடவுளிடம் வரம் கேட்பதிலெல்லாம் நம்பிக்கையில்லை....
ஆனாலும் கேட்டுவிடுகிறேன் இந்த ஒருமுறை..
"என் வாழ்வின் கடைசி மூச்சுவரை அவன் மீது வீசும் வாசத்தை சுவாசம் கொண்டால் போதும்"❤
எனைவிட்டுப் பிரிந்து செல்ல மனமில்லாமல் நீ தவிப்பது போலவே
உனக்கான கவிதையும் முற்றுப் பெற முடியாமல் என் உணர்வுகளுடன் போராட்டம் கொள்கின்றது😘
உன்னுள் கட்டுண்டு கிடக்கும் இவளின் ஆசையெல்லாம்....
உன்னைக் கட்டிக் கொள்வது மட்டும் தான்