Header Ads

பாழாய்ப் போன காதல்

பாழாய்ப் போன காதல்



அவனின் அன்பை முழுதாய் வென்ற இவளுக்கு
வேறெந்த வெற்றியும் அத்தனை மகிழ்ச்சியை தந்துவிடப்போவதில்லை ❤

கடைசிவரை அவனின் கொஞ்சலில் சொக்கிக் கிடப்பதற்கே
இந்தக் குழந்தை மனம் ஏங்குகிறது❤

அவன் மார்பில் அழகு முகம் புதைப்பதும்❤
கைகள் கோர்த்துக் கொண்டு கதைப்பதும்❤
கன்னத்தில் பதித்திடும் முத்தங்களும்❤
சின்ன சண்டைகளும்❤
செல்லக் கொஞ்சல்களும்❤
நெற்றியின் முத்தங்களும்❤
அன்பான வருடல்களும்❤
நேரம் புரியாத நீண்ட நேரப் பேச்சுகளும்❤
இவள் நாட்களை அழகுற மாற்றிவிடுகின்றன

அவன் கைக்குள் உஷ்ணம் தேடும் கோழிக்குஞ்சு போல் அடங்கிக் கிடக்கின்றேன்
இந்த பாழாய்ப் போன காதலால்❤❤
Powered by Blogger.