Header Ads

முத்தம்

முத்தம்

Image result for tamil  kiss love cinema photo

கழுத்தில் உரசும் கூந்தலை விரல்களால் வருடிக்கொண்டு கண்ணோடு கண் பார்க்கின்றான்😍
பார்வையின் தாக்கம் தாளாமல்
 இமைகள் தாழ்த்திக் கொள்ள
 இதழோடு இதழ் வருடுகின்றான்....
அவனுக்கும் எனக்குமான வெற்றி தோல்வி இன்றிய முத்தப் போராட்டம் அவனால் ஆரம்பமாயிற்று😘

உள்ளுக்குள் மெல்ல மெல்ல உடைந்து
உணர்வுகளை அவனுக்குள் கரைக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் நேரம்
எட்டித் தள்ளி நிறுத்தி உரைக்கின்றான்
"#முத்தம்காமத்தில்சேர்ந்ததில்லைநம்காதலில்_சேர்ந்ததென்று

அவன் கவிதையாய் இதழ் தோய்த்த முத்தத்திற்கு கவிதையொன்று வேண்டி நிற்கின்றான்❤
உயிரை ஒரு நிமிடத்தில் குடித்துவிட்டு
உணர்வுகள் மறந்து நின்ற இவளிடம்
கவிதை கேட்ட அவனின் கன்னத்தில் கவிதை பதித்துவிட்டு வந்தவள்...
இப்பொழுது அவன் கேட்ட கவிதையை அவனுக்காக பதிவிடுகிறாள்
Powered by Blogger.