என்_காதல்காரன்❤
என்_காதல்காரன்❤
அவன் மூச்சுக் காற்றிலே என்னை சுயம் இழக்கச் செய்கின்றான்.
சின்னக் கோபத்தையும்
சிரித்தே இரசிக்கின்றான்😘
அடாவடியாக தள்ளி நிற்கின்றேன்
அருகில் வந்து அமர்ந்து கொள்கின்றான்❤
ஏன் என்மீது இத்தனை காதல் என்றேன்
பதிலாக சிரித்து சிரித்து என்னை காதல் கொள்ளச் செய்கின்றான்😍
என் கண் பார்த்தே காதல் கொள்கிறான்..
அடிக்கடி முத்த முத்திரை பதித்து என்னை ஆட்கொள்கின்றான்❤
என் நாணம் கூட நாணம் கொள்கின்றது
என் காதல் பார்வைகளை அவன் கண்டு கொள்ளும் போது 😍
ஒற்றை கண்சிமிட்டலிலும் ஓரப் புன்னகையிலும் உயிரில் தீ மூட்டி போகின்றான்😋
விடைபெறும் போதெல்லாம் தலை தடவி கன்னத்தில் முத்தம் பதிக்கின்றான்..
அந்த கன்னத்தின் காயாத ஈரம் வந்து உணர்த்தி போகின்றது அவன் #என்_காதல்காரன் என்று