Header Ads

அழகு❤

அழகு❤


Related image

காலையில் எழுந்ததும் சோம்பல் முறிக்காமல் அவன் அனுப்பும் "good morning" அழகு❤

வேலைப்பளுவின் மத்தியிலும் இடையிடையே அவன் அனுப்பும் காதல் வார்த்தைகள் அழகு❤

இருவரும் சேர்ந்தே போகையிலும் ஓர் அடி முன்னே போகும் அவனின் சாய்ந்த நடை அழகு❤

தவறி உளறிக் கொட்டிய தருணங்களில் கண்ணில் பயத்துடன் அவன் உதடு கடிக்கையில் பேரழகு❤

சிறுவனாய் என்னுடன் விளையாடி
நான் தோற்றுப் போகையில் அவன் முகத்தில் தோன்றும் பிரகாசம் ஆயிரம் அழகு❤

அவன் முத்துப்பல் தெரியும் புன்னகை
ஈடு இணை இல்லா அழகு❤

குலுங்கக் குலுங்கச் சிரிக்கையில்
கண்ணின் ஓரம் தோன்றும் சிரிப்பு கொள்ளை அழகு❤

சிறு சிறு கோபங்களின் போதெல்லாம்
அதனை சரிசெய்யும் அவனின் கொஞ்சல் அழகோ அழகு❤

என் அருகில் இருக்கையில் பேச்சின் நடுவில் அவன் கொள்ளும் நிம்மதியான உறக்கம்
அழகு❤

ஆயிரம் முறை அவன் சொல்லும் i love you
எனக்கான அழகு❤

அவன் கைக்குள் நான் அடங்கியிருக்கையில்
என் தந்தையின் அழகு❤

அவன் தூங்கும் பொழுதுகளில் பார்த்து இரசித்திட தூண்டிடும் அந்த பிள்ளை முகம்
அத்தனை அழகு❤❤

சின்னக் கோபங்களும் செல்லச் சீண்டல்களும்
என்னவனின் தனி அழகு❤

அடுத்தவர் முன்னிலையில் அவன் வீசும் ஓரப்பார்வைகள் , வெட்கம் தூண்டும் அழகு❤

அடிப்பதாய் நான் மிரட்டுகையில்
பயந்ததாய் அவன் நடிக்கையில்
அப்பப்பா.... அது பேரழகு❤❤❤

என் கூந்தல் ஓரம் ஒதுக்கி அவன் காதோரம் இரகசியம் பேசுகையில்
அந்த காதலே அழகு❤

கூந்தலில் நீர் வடிய குளித்து வருகையில்
அருகே இழுத்து அவன் தலை துவட்டிவிடுவது
அக்கறையின் அழகு❤❤

நான் பயம் கொள்ளும் பொழுதிலெல்லாம்
தான் இருப்பதாய் உணர்த்துகையில்
அந்த ஆண்மை அழகு❤

துவண்டு போகும் பொழுதிலெல்லாம்
அவன் தோளோடு தாங்கிக் கொள்வது
தாயின் அழகு❤

என்னை அவனுள் தொலைக்கும் தருணங்களில்❤❤❤❤
அது எண்ணற்ற அழகு❤❤❤

#அவன்காதல்இவளுக்கு_பேரழகு
Powered by Blogger.