உனக்குள் தொலைகிறேன்
நான் கடந்த இந்த நாட்களின் பயங்கரங்களுக்கு,
ஒற்றை நாளில் பதில் சொல்லிப் போனாயடா...
பசி தூக்கம் பாராமல்
பரிதவித்துக் காத்திருந்ததெல்லாம் இதற்காகத்தானா...
உன்னைப்போல் ஓர் துணை யாருக்கு கிடைத்துவிடும் எனும் கர்வம்
இன்னும் என்னை ஆட்டிப்படைக்கின்றது...
நட்பு காதல் காமம் என்று, எல்லாம் கடந்து சிந்திக்கின்றேன்..
அப்படியென்ன அலாதிப்பிரியம் இது❤
அளவேயில்லாத என் புன்னகையை இரசிக்கும் உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை... என் மொத்தப் புன்னகையும்
உன் காதலின் மொத்தப் பிரதிபலிப்பு என்று..
ஆயுளின் அத்தனை நாளையும் இப்பொழுதே உனக்கு எழுதித்தருகின்றேன்....
என் நாட்கள் இனி நகரட்டும் உன் நாட்டப்படியே...
கன்னம் தொடும் மூச்சுக்காற்றில் உள்ள மோகம் குன்றும் பொழுதுகளிலும், ❤
காலம் தாண்டியும் உன் தீண்டல்களில்
நான் வெட்கம் கொள்ளும் பொழுதுகளிலும்❤
அத்துமீறி என்னுள் நீ நடத்திப் போகும் காதல் யாகங்களின் பொழுதுகளிலும்❤
கழுத்தில் நீ பதிக்கும் உன் அடையாளங்களின் பொழுதுகளிலும்❤
அந்த ஆண்மையை அத்துமீறும்
என் பெண்மையின் பொழுதுகளிலும்❤
என் வாழ்நாளை அந்த காதலில் தொலைத்தே..... சாகிறேன் போ❤❤❤