Header Ads

மீட்டுக் கொடு

முத்தம் கொடுத்து மூர்ச்சையற்றாக்கும் பொழுதுகளில் ,
காதுமடல் கடிக்காதே என் கிராதகா...
பித்தம் பிடரிவழியே தலைக்கேறுகின்றது..

கால்கள் பிண்ணத் தலைவரையேறும் மோகத்தைத்
தடுத்திட வழிதேடி உன் மார்பில் புதைந்தால்..
உன் மேனிதனில் வீசும் வாசம் என்னை மோட்சம் கொள்ளச் செய்கின்றது....

என்னை மீறியே ஏறியிறங்கும்
என் மூச்சின் ஓசைகளும் , கம்பீரமாய் படர்ந்திருக்கும் அந்த மீசைக்குள் புதைந்திருக்கும் உன் மேலுதட்டுடன் கலந்திடத்தான் வேண்டி நிற்கின்றது....

கீழுதட்டில் என்ன குற்றம் கண்டீரென்றால்....
கூடலின் தட்பவெப்பமதை அப்படியே ஒப்புவிக்கும் சிவந்த அந்த கீழுதட்டில்,
சின்னாபின்னமாய் நான் உனக்குள் சிதைந்துபோவதையே குற்றமென எப்படியடா உன்னிடம் சொல்வேன்.....

வெட்கப் பார்வைகள் வேண்டி நிற்கும்
உன் வேவுப் பார்வைகள் எனக்குப் புரிகிறது..
வருடலின் போதே வளைந்து கொடுத்து வழி தெரியாமல்....
உன்னில் என்னை தேடுவதா தொலைப்பதா என எதுவும் புரியாமல்....
வெள்ளந்தியாய் வெறித்துப் பார்க்க மட்டுமே இக்கணத்தில் என்னால் இயலும்...

காதலா, காமமா என்ற ஆராய்ச்சி சொற்பொழிவுகளுக்கு இடமில்லை இங்கு...
காலநிலை சீர்செய்ய  உன்னால் மட்டும் தான் இயலுமெனும் போது,
சண்டாளா மேனியெங்கும் பரவியிருக்கும் வெப்பத்தை குளிர்விக்க நீ கடமையாற்றுவதுதானே முறை....
Powered by Blogger.